Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 13 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தின் பெரும்பாலுமான பகுதிகளில் கோடை வெயில் தொடங்கி விட்டது. இனி வரும் நாட்களிலும் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பநிலை உயரக்கூடும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
இந்த நிலையில், தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 8 மணி வரையிலும் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது.
சாலையை மறைக்கும் வகையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்தது. வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு ஊர்ந்து சென்றன.
மேலும், தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தை மறைக்கும் அளவிற்கு பனிமூட்டம் இருந்ததால் காலையிலேயே கோபுர தரிசனத்தை காண வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நெடுஞ்சாலையில் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு கடும் சிரமத்துடனே சென்றனர். நடைப்பயிற்சி செல்வோரும், அதிகாலையில் எழுந்து பல்வேறு வேலைகளுக்கு செல்வோரும் அவதிக்குள்ளாயினர்.
குடியிருப்பு பகுதிகளிலும் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த பனிமூட்டம் காலை 8 மணி வரை நீடித்தது.
Hindusthan Samachar / vidya.b