Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறன.
இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே ராமநாதபுரம் கமுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா அன்று பொதுக்கூட்டத்தில் சசிகலா உரையாற்றினார்.
அப்போது அவர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் கொண்ட கொடியை அறிமுகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சசிகலா புதிய கட்சியைத் தொடங்க இருப்பதாகவும், புதிய கட்சி பெயரை விரைவில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சசிகலா இன்று (13.03.2026) சென்னையில் அவரது கட்சியின் பெயரை வெளியிட்டார்.
அதன்படி, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என தனது கட்சி பெயரை அவர் தெரிவித்தார்.
மேலும் கட்சியின் சின்னமாகத் தென்னந்தோப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b