Enter your Email Address to subscribe to our newsletters

கான்பூர், 14 மார்ச் (ஹி.ச.)
கான்பூரின் NH 19 தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்தார், மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து கான்பூர் காவல் ஆணையரகத்தின் மேற்கு மண்டல துணை ஆணையர் எஸ்.எம். காசிம் அபிடி தெரிவித்த தகவலானது,
விபத்து ஏற்பட்ட அந்தப் பேருந்து கான்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
காயம் அடைந்தவர்களில் சிலர் படுகாயங்களுடனும், மற்றும் சிலர் லேசான காயங்களுடனும் இருக்கிறார்கள்.
அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறிய காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM