சென்னை எழும்பூர் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகளில் மாற்றம்
சென்னை, 14 மார்ச் (ஹி.ச.) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் (Platforms) மறுசீரமைப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 5 மற்றும் 6-வது நடைம
Changes in train services


சென்னை, 14 மார்ச் (ஹி.ச.)

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் (Platforms) மறுசீரமைப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 5 மற்றும் 6-வது நடைமேடைகள் வழியாக இயக்கப்படுகின்றன.

தற்போது, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) ரெயில், மார்ச் 17-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

அதேபோல், மறுமார்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து சென்னை வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் (12632) ரெயில், மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை எழும்பூர் வராமல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும், எழும்பூரில் இருந்து காலை 8:00 மணிக்குத் திருச்சி நோக்கிப் புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் (22675) ரெயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரெயில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 5 வரை, வழக்கமான நேரத்தை விட 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக, அதாவது காலை 10:15 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் எனத் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b