சென்னையில் வீடு புகுந்து கத்தி முனையில் 27 சவரன் நகை கொள்ளை
சென்னை, 14 மார்ச் (ஹி.ச) சென்னை அமைந்தகரை என் எஸ் கே நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் ருக்குமணி (வயது 54) தம்பதியினர். மாதவரம் பணிமனையில் டிரைவராக பணியாற்றும் ரவிச்சந்திரன் பணி முடிந்து நள்ளிரவு வீட்டுக்கு வருவாராம். அதற்காக ஜ
Jewellery


சென்னை, 14 மார்ச் (ஹி.ச)

சென்னை அமைந்தகரை என் எஸ் கே நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் ருக்குமணி (வயது 54) தம்பதியினர்.

மாதவரம் பணிமனையில் டிரைவராக பணியாற்றும் ரவிச்சந்திரன் பணி முடிந்து நள்ளிரவு வீட்டுக்கு வருவாராம்.

அதற்காக ஜன்னல் ஓரத்தில் சாவியை வைத்துவிட்டு, ரவிச்சந்திரன் மனைவி ருக்மணி தூங்கியுள்ளார்.

வழக்கமாக ஜன்னல் ஓரத்தில் தான் சாவியை வைத்துவிட்டு தூங்குவாராம், இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஜன்னல் ஓரத்தில் இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து வீட்டுக்குள் புகுந்து,

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ருக்மணியைஎழுப்பி கத்தியை காட்டி மிரட்டி 27 சவரன் நகையை

பறித்து விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

இது குறித்து ,அமைந்தகரை போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ