Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மார்ச் (ஹி.ச.)
சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை 2008 ஆம் ஆண்டு பறக்கும் ரயில் நீட்டிப்பு பணி தொடங்கியது கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சுமார் 730 கோடி ரூபாய் மதிப்பில் 4.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு இருவழிப்பாதையாக இப்பணிகள் நடைபெற்று வந்தது.
சென்னை கடற்கரை பரங்கிமலை இடையே 43 ரயில் சேவையும் , சென்னை கடற்கரை வேளச்சேரி இடையே 2 ரயில் சேவையும் , வேளச்சேரி பரங்கிமலை இடையே 3 ரயில் சேவையும் என இரு மார்க்கத்திலும் இன்று முதல் இயக்கப்படுகிறது.
தென் சென்னை மக்களின் 17 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் பறக்கும் ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது
இந்த ரயில் சேவை வேளச்சேரியில் இருந்து காலை 5.25 மணிக்கு தொடங்கியது. பரங்கி மலையில் 5.45 மணிக்கு வந்தடைந்தது.
இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்ட புறநகர் ரயில் காலை 6.05 மணிக்கு பரங்கி மலையை வந்தடையும்
மறு மார்க்கத்தில் பரங்கி மலையிலிருந்து கடற்கரைக்கு காலை 5 மணிக்கு ரயில் இயக்கப்பட்டது.
இரவு 10.25 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து பரங்கிமலைக்கு இரு மார்க்கத்திலும் கடைசி ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளால் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , மாற்று வழித்தடமாக சென்னை கடற்கரை பரங்கிமலை இடையேயான பறக்கும் வகையில் சேவை விளங்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.
பரங்கிமலையிலிருந்து புறநகர் மின்சார ரயில்கள் , பறக்கும் ரயில் சேவை , மெட்ரோ ரயில் என பல்வேறு பொதுப்பக்குவரத்தை பயன்படுத்தும் வகையில் நிலையம் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கடற்கரை பரங்கிமலை இடையயோன பறக்கும் ரயில் சேவையின் வழித்தடம்:
'Down' ரயில்கள் (சென்னை கடற்கரை - புனித தோமையர் மலை) சென்னை கோட்டை, சென்னை பூங்கா நகர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், முண்டகக்கண்ணியம்மன் கோயில், திருமயிலை, மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூர்பா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி மற்றும் புழுதிவாக்கம் ஆகிய நிலையங்களில் நிற்கும், ஆனால் ஆதம்பாக்கம் (ABKM) நிலையத்தில் நிற்காது.
'Up' ரயில்கள் (புனித தோமையர் மலை - சென்னை கடற்கரை) ஆதம்பாக்கம் (ABKM) நிலையத்தில் நிற்காது; மாறாக புழுதிவாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூர்பா நகர், கோட்டூர்புரம், கிரீன்வேஸ் சாலை, மந்தைவெளி, திருமயிலை, முண்டகக்கண்ணி அம்மன் கோயில், கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை பூங்கா நகர் மற்றும்
சென்னை கோட்டை ஆகிய நிலையங்களில் நிற்கும்.
'Down' ரயில்கள் (வேளச்சேரி - புனித தோமையர் மலை) புழுதிவாக்கம் (PZV) நிலையத்தில் நிற்கும்; ஆனால் ஆதம்பாக்கம் (ABKM) நிலையத்தில் நிற்காது.
'Up' ரயில்கள் (புனித தோமையர் மலை - வேளச்சேரி) ஆதம்பாக்கம் (ABKM) நிலையத்தில் நிற்காது; மாறாக புழுதிவாக்கம் (PZV) நிலையத்தில் நிற்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ