சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ற கேஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை
திருப்பூர், 14 மார்ச் (ஹி.ச) மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில
Gas Agency Sealed


திருப்பூர், 14 மார்ச் (ஹி.ச)

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் 'ஸ்ரீ சத்குரு கேஸ் ஏஜென்சி' என்ற நிறுவனம் 2,100 ரூபாய் மதிப்புள்ள சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதை 4000 ரூபாய்க்கு விற்றதாக புகார் எழுந்தது.

இதனை அடுத்து மாவட்ட அலுவலர் நேரில் ஆய்வு செய்த பொழுது அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஸ்ரீ சத்குரு கேஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்து விட்டு சென்றனர்.

கேஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

நேரில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பித்த பின்னர் என்னென்ன மாதிரிகள் முறைகேடுகள் நடைபெற்றது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.

தவறு உறுதி செய்யப்பட்டால் பதுக்கல் நடவடிக்கையின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b