நாளை குரூப் 2 முதன்மை எழுத்து தேர்வு - தர்மபுரியில் 669 பேர் பங்கேற்பு
தர்மபுரி, 14 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒத்திவைக்கப்பட்ட குரூப், 2 தேர்வுகளில் தர்மபுரியில் நாளை 669 பேர் பங்கேற்கவுள்ளனர். இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்
Group 2 Main Written Exam


தர்மபுரி, 14 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒத்திவைக்கப்பட்ட குரூப், 2 தேர்வுகளில் தர்மபுரியில் நாளை 669 பேர் பங்கேற்கவுள்ளனர்.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், ஒத்திவைக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்கான குரூப், 2 குரூப், 2ஏ தேர்வு பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு நாளை (மார்ச், 15) காலை மற்றும் மதியம் நடைபெறவுள்ளது.

தர்மபுரியில் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலையில், 325 பேர் மதியம், 344 பேர் தேர்வெழுதவுள்ளனர்.

தேர்வு மையத்தில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, நாளை தேர்வு மையத்திற்கு காலை, 8:30 முதல், 8:59 மணி வரை மதியம், 1:30 முதல், 1:59 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவர்.

இதில், தேர்வாணையத்தால் தடைசெய்யப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை.

கடைசி நேர அலைச்சல்களை தவிர்க்க, தேர்வு விதிமுறைகளை கடைபிடியுங்கள்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b