அனைத்து ஹோட்டல்களுக்கும் மின் கட்டண சலுகை- தமிழக அரசு அதிரடி!
சென்னை, 14 மார்ச் (ஹி.ச.) மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது இதனால் சமையல் எர
Radhakrishnan


சென்னை, 14 மார்ச் (ஹி.ச.)

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது

இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து ஹோட்டல்களுக்குமான மின்சார கட்டணத்தில் தமிழ்நாடு அரசு அதிரடியாக சலுகையை அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று மார்ச் 14-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சார வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன், சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் மின்சார அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் அனைத்து வகை உணவகங்களுக்கும் மின் கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 சலுகை வழங்கப்படும் என அறிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN