Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 14 மார்ச் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல் டீசல் விநியோகம் பாதிக்கப்படாத நிலையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து உதகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்ய தண்ணீரு கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் உணவகங்கள் உரிமையாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுடன் பேசிய அவர்:
நீலகிரி மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் தட்டுப்பாடும் இல்லை என்றும் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் தெரிவித்தார். எனவே பொதுமக்கள் வழக்கமாக பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரை போல புக் செய்தால் போதும் என்றும் கேஸ் சிலிண்டர் வினியோகம் நகரப் பகுதி ஊரகப்பகுதி என தனித்தனியாக பிரித்துள்ளதாகவும் நகர பகுதிகளில் 25 நாட்களுக்கு பின் முன்பதிவு செய்யலாம் என்றும் கிராமப் பகுதிகளில் இருக்கும் மக்கள் விறகு போன்றவற்றை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் 40 நாட்களுக்கு ஒரு முறை கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் மூன்று நிறுவனங்கள் பெட்ரோலியம் மற்றும் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்து வருவதாக கூறிய அவர் இந்த நிறுவனங்கள் தற்போது உள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வணிக கேஸ் சிலிண்டர் விநியோகத்தை தொடங்கி இருப்பதாகவும் எனவே பொதுமக்கள் பீதி அடைந்து உடனுக்குடன் இரண்டு சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டாம் என்றார். மேலும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் உணவு சமைத்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு ஒரு இடத்தில் சமையல் செய்து பள்ளிகள் மற்றும் மருத்துவமனைக்கு உணவு விநியோகம் செய்தால் கேஸ் சிலிண்டர் பிரச்சனை இருக்காது என்ற அவர் நீலகிரி மாவட்டம் சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற மாவட்டம் என்பதினால் இங்குள்ள உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவு வகைகள் குறைத்திருப்பதாகவும் மின் அடுப்பிற்கு மாறி வருவதற்கு நன்றி தெரிவித்தார். குறிப்பாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க உணவகங்கள் குழுக்களாக ஏதேனும் ஒரு இடத்தில் உணவு சமைத்து கொண்டு செல்லுமாறும் உணவகங்கள் மின்சார அடுப்பிற்கு மாற்றிக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்த அவர் மின்சார அடுப்பிற்கு மாறுவதற்கு உதவ மின்வாரியம் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கேஸ் சிலிண்டர்கள் பதுக்குபவர்கள் மீது உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது போன்று யாரேனும் செயல்பட்டாலோ அல்லது கேஸ் சிலிண்டர் தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலும் 0423 2441216 என்ற கட்டுப்பாட்டு எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடனடியாக உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.
பொதுமக்கள் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்தால் உடனடியாகவோ அல்லது ஓரிரு நாட்களில் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீலகிரியில் ரோட்டோர கடைகள் மற்றும் சிறிய உணவகங்கள் என 6000 சிலிண்டர் இணைப்புகள் இருப்பதாகவும் தற்போதைக்கு வணிக சிலிண்டர்கள் விநியோகத்தில் பெரிய பாதிப்பு இல்லை என்ற அவர் பெட்ரோலிய நிறுவனங்கள் படிப்படியாக வணிக சிலிண்டர் விநியோகத்தில் தொடங்கி உள்ளதாகவும் நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இதுவரை இல்லை என்றும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுகள் மூடுவது குறித்த தகவல் எதுவும் மாவட்ட நிர்வாகத்திற்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN