Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 14 மார்ச் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாடிக்கொம்பு, அகரம்
பேரூராட்சி பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை மற்றும் கலையரங்கம்
உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை திறந்து வைப்பதற்காக ஊரக வளர்ச்சி துறை
அமைச்சர் பெரியசாமி வருகை புரிந்தார்.
அப்பொழுது தாடிக்கொம்பு அருகே உள்ள
சத்திரப்பட்டியில் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை திறக்க
வந்த பொழுது திண்டுக்கல், கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அவரை வரவேற்பதற்காக
திமுகவினர் பட்டாசு வெடித்தனர்.
அப்பொழுது அதிக அளவு பேப்பர் சுற்றப்பட்ட வெடிகளை வெடித்ததால் சாலையின் நடுவே பேப்பர்கள் தீப்பற்றி எறிய தொடங்கியது.
இதனால் சாலை முழுவதும் பேப்பர்கள் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் அந்தப் பகுதியில் திடீர்னு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
மேலும் அமைச்சரே வரவேற்க தேசிய நெடுஞ்சாலையில் திமுகவினர்
வைக்கப்பட்ட வெடிகளால் சாலையில் தீப்பிடித்தது பொதுமக்களிடம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam