Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 14 மார்ச் (ஹி.ச)
நெல்லைப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையே, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் கடலூரைச் சேர்ந்த ஒரு தொழிலாளியுடன் அந்தப் பெண்ணிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியதை அடுத்து, இருவரும் திருமணம் செய்துகொண்டு நெல்லை டவுன் பகுதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், தனது முதல் கணவருக்குப் பிறந்த 6 வயது சிறுமிக்கு அந்தத் தொழிலாளி பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்துத் தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், உடனடியாக நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்தத் தொழிலாளி மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / vidya.b