அஸ்ஸாம் ஷில்லாங்-சில்சார் நான்கு வழி விரைவுச் சாலை அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்
கவுகாத்தி, 14 மார்ச் (ஹி.ச.) அஸ்ஸாமில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று வடகிழக்கு இந்தியாவில் முதன்முறையாக அமைக்கப்படவுள்ள நான்கு வழி விரைவுச் சாலையான ''ஷில்லாங்-சில்சார் மார்க்கத்திற்கான'' பூமி பூஜையை நடத்தவுள்ளார்
அஸ்ஸாம் ஷில்லாங்-சில்சார் நான்கு வழி விரைவுச் சாலை அடிக்கல் நாட்டு விழாவை இன்று துவக்கி வைக்கும் பிரதமர் மோடி


கவுகாத்தி, 14 மார்ச் (ஹி.ச.)

அஸ்ஸாமில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று வடகிழக்கு இந்தியாவில் முதன்முறையாக அமைக்கப்படவுள்ள நான்கு வழி விரைவுச் சாலையான 'ஷில்லாங்-சில்சார் மார்க்கத்திற்கான' பூமி பூஜையை நடத்தவுள்ளார்.

சுமார் ரூ. 22,860 கோடி செலவில் உருவாகவுள்ள இந்த 166 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை, மேகாலயா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடர்பை கணிசமாக மேம்படுத்தும்.

இந்தத் திட்டம் கவுகாத்தி மற்றும் சில்சார் நகரங்களுக்கு இடையிலான தொலைவைக் குறைப்பதோடு, பயண நேரத்தை 8.5 மணி நேரத்திலிருந்து சுமார் 5 மணி நேரமாகக் குறைக்கும்.

இதன் மூலமாக இப்பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கும், எல்லை தாண்டிய வணிகத்திற்கும் ஊக்கமளிக்கும்.

சில்சார் நகரத்தில் உள்ள 'கேபிடல் பாயிண்ட்' அருகில் உள்ள 'டிரங்க் சாலை' முதல் NH-306 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 'ரங்கிர்காரி பாயிண்ட்' வரையிலான மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவையும் பிரதமர் நடத்தவுள்ளார்.

ராம்நகர் பகுதியில் நடைபெறவிருக்கும் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

சில்சார் நகரத்தின் மிக முக்கியமான சாலைகளில் ஒன்றான இடத்தில் போக்குவரத்து இடையூறுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், மிசோரம், திரிபுரா மற்றும் மணிப்பூர் போன்ற அருகில் உள்ள மாநிலங்களுடனான தொடர்பை அதிகரித்து, ‘பாராக் பள்ளத்தாக்கின்’ பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியும்.

கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதர்கண்டி என்னுமிடத்தில் புதிதாக அமையவிருக்கும் வேளாண்மைக் கல்லூரிக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

இந்த நிறுவனம் அஸ்ஸாம் மாநிலத்தின் விவசாயக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், பாராக் பள்ளத்தாக்கு மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு, தங்கள் இல்லங்களுக்கு அருகிலேயே உயர்தர விவசாயக் கல்வியைப் பெறும் வாய்ப்பை உருவாக்கும்.

Hindusthan Samachar / JANAKI RAM