பால் வண்டியில் குட்கா கடத்தி விற்பனை செய்து வந்த நபர் கைது!
நாமக்கல்ல், 14 மார்ச் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த தெற்கு பாளையம் பகுதியில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று ஆய்வு செய்த போலீசார் 150 கிலோ மதிப்புடைய குட்காவை
Seizure


நாமக்கல்ல், 14 மார்ச் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம்

பள்ளிபாளையம் அடுத்த தெற்கு பாளையம் பகுதியில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்று ஆய்வு செய்த போலீசார் 150 கிலோ மதிப்புடைய குட்காவை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் பால் விற்பனை செய்யப்படுவதைப் போல் குட்கா பொருட்களை பால்வண்டி ஏற்றி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ராமச்சந்திரன் என்ற நபரை கைது செய்த போலீசார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்செங்கோடு சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN