Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மார்ச் (ஹி.ச)
சென்னை தி.நகர் பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்தைக் கூறி, 21 வயதான வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையறிந்த சிறுமியின் அளித்த அளித்த புகாரின்படி,
வடபழனி அனைத்து மகளிர் போலீசார், இந்திய தண்டனை சட்டம், 'போக்சோ' சட்டப் பிரிவுகளின் கீழ், வாலிபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, வாலிபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளன என கூறி, அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 1.10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ