Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 14 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்ததில் இயற்கை உபாதை கழிக்க சென்ற +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்புகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்கும்படி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தூத்துக்குடி சாலையில் ஆறுமுகநேரி போலீஸ் செக் போஸ்ட் அருகில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் ஒரு மணி நேரம் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதனால் தூத்துக்குடி திருச்செந்தூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் உட்கோட்ட டிஎஸ்பி மகேஷ் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam