Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மார்ச் (ஹி.ச.)
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலையானது கச்சா எண்ணெய் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் பரிமாற்ற வீதம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார காரணிகளைப் பொறுத்து எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களால் அவ்வப்போது நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில், சென்னையில் இன்று (14.03.2026 - சனிக்கிழமை), ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.06 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.92.61 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனுடன், இயற்கை எரிவாயுவானது (சிஎன்ஜி) ஒரு கிலோ ரூ.91.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM