தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீது அரசு நிறுவனமான டிட்கோ பங்குரிமை அடிப்படையில் முதலீடு செய்துள்ளது - தொழில்துறை அமைச்சர் டி ஆர்.பி.ராஜா
சென்னை, 14 மார்ச் (ஹி.ச) சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழகம் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.தமிழகம் முழுவதும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி ஏற்பட்டுள்ளத
Trb raja


சென்னை, 14 மார்ச் (ஹி.ச)

சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

திமுக ஆட்சியில் தமிழகம் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.தமிழகம் முழுவதும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்கள் போல் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் நாட்டிற்கும் தொழில் நிறுவனங்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது startup நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.2021 ம் ஆண்டுகளில் 2045 startup நிறுவனங்கள் இருந்தது தற்போது 13 ஆயிரம் startup நிறுவனங்கள் உள்ளது.

இந்தியாவில் அதிக startup நிறுவனங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.

Startup நிறுவனங்களுக்கு தமிழக அரசு உதவி செய்கிறது.டிட்கோ நிறுவனம் புதிய startup நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

அக்னி கூல் startup மற்றும் ராப்டி startup நிறுவனங்கள் மீது முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அக்னி கூல் நிறுவனம் ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.ராப்டி நிறுவனம் DC மோட்டரில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கிறது.இரு நிறுவனங்கள் மீதும் தலா 25 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

Product nation tamilnadu என்ற அடிப்படையில் பணிகளை முன்னெடுத்துள்ளோம்.பங்குறிமை அடிப்படையில் (VC) முதலீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் தொழில் நுட்பம், மதிப்பு கூட்டப்பட்பட்ட வேளாண் பொருட்கள் போன்ற startup நிறுவனங்களை வரவேற்கிறோம்.

என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ