Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 14 மார்ச் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மார்கழி, தை மாதம் முன் பனிக்காலமாகும். இருப்பினும் மார்கழியில் சில வாரங்கள் மட்டுமே பனியின் தாக்கம் இருந்தது.
பின்பு மெல்ல பனி விலகத் தொடங்கியது. பொதுவாக மாசி,பங்குனி வரை பின் பனிக்காலம் தொடரும். ஆனால் முன்னதாகவே பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பகலில் வெயிலின் தாக்கமும், இரவில் புழுக்க நிலையும் தொடர்கிறது.
பொதுவாக வெயில காலங்களில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை ஈடுகட்ட வெள்ளரி, தர்பூசணி உள்ள நீர்ச்சத்து காய்களும், பழங்களும் அதிகளவில் விற்பனைக்கு வருவது வழக்கம். முன்னமே தொடங்கிய வெயிலின் தாக்கத்தினால் தர்பூசணி பழங்கள் மாவட்டத்துக்கு அதிகளவில் வரத் தொடங்கி உள்ளது.
ஈரோடு நேதாஜி மார்க்கெட் பழ மண்டிக்கு, தர்பூசணி வரத்து சில நாட்களுக்கு முன் அதிகரித்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.
இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது,
கோடை சீசன் துவங்கும் முன்பே, வெயில் சுட்டெரித்து வருவதால் தர்பூசணி நுகர்வு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு தர்பூசணி ஊசி மூலம் வர்ணம் சேர்க்கப்படுவதாக எழுந்த சர்ச்சையால் சாகுபடி சற்று குறைந்தது. இதனால் நடப்பாண்டு விளைச்சல் குறைந்து, தற்போது வரத்தும் குறைந்துள்ளது.
ஈரோடு மார்க்கெட்டுக்கு சீசன் நேரம், 16 முதல், 20 டன் வரை தினமும் வரத்தாகும். தற்போது திண்டிவனம் பகு-தியில் இருந்து மட்டும், 10 டன் வரத்தாகிறது.
தேவை அதிக-ரிப்பால் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ, 23 ரூபாய்க்கு விற்பனை செய்யபப்ட்டு வருகின்றது.
இவ்வாறு கூறினார்.
Hindusthan Samachar / vidya.b