கரூரில்,கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதியது ,இனிவரும் காலங்களில் தனியார் ரெயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை
சென்னை, 15 மார்ச் (ஹி.ச.) கரூரில்,கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, கர
Annamalai


Ue


சென்னை, 15 மார்ச் (ஹி.ச.)

கரூரில்,கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கரூர் மாவட்டம் ஜல்லிப்பட்டி அருகே, தனியார் ஆளில்லா ரெயில்வே கிராசிங்கில், கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

விபத்தில் காயமடைந்த மாணவ, மாணவியர்கள் அபாயகட்டத்தில் இருந்து வெளிவந்து விட்டார்கள் என்ற செய்தி மனநிம்மதி அளிக்கிறது. அவர்கள் அனைவரும் விரைவில் பூரண நலம்பெற, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

இது போன்ற நிகழ்வுகள் மிகவும் துரதிருஷ்டவசமானது. மேலும் இது போன்ற நிகழ்வுகள் எங்கும் ஏற்படாமல் தடுக்க, தனியார் ரெயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

விபத்து குறித்த செய்தி அறிந்ததும் உதவிய பொதுமக்களுக்கும், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, மாணவ மாணவியரைச் சந்தித்து, ஆறுதல் கூறிய, தமிழக பாஜக கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கும், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ