தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நாளை திருச்சி-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
திருப்பூர், 15 மார்ச் (ஹி.ச.) ஈரோடு-கரூர் இடையே மூர்த்திபாளையம் ரெயில் நிலையம் பகுதியில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அந்த பணிகளை எளிதாக்கும் வகையில் குறிப்பிட்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி-பாலக்காட
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நாளை திருச்சி-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்


திருப்பூர், 15 மார்ச் (ஹி.ச.)

ஈரோடு-கரூர் இடையே மூர்த்திபாளையம் ரெயில் நிலையம் பகுதியில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

அந்த பணிகளை எளிதாக்கும் வகையில் குறிப்பிட்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி-பாலக்காடு (வண்டி எண்.16843) எக்ஸ்பிரஸ் நாளை (திங்கட்கிழமை) திருச்சியில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு கரூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும்.

தொடர்ந்து பணிகள் முடிந்ததும் கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து பாலக்காடுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.

Hindusthan Samachar / JANAKI RAM