சென்னை-கும்பகோணம் சாலையில் ரூ 3.78 கோடியில் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடக்கம்
கடலூர், 15 மார்ச் (ஹி.ச.) கடலூர் மாவட்டம் சென்னை-கும்பகோணம் சாலையில், சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடியில், வீராணம் ஏரியின் வடிகால் வாய்க்கால் குறுகிய வளைவு பாலம் கடந்த, 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் பழுதடைந்து விரிசல்
சென்னை-கும்பகோணம் சாலையில் ரூ 3.78 கோடியில் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடக்கம்


கடலூர், 15 மார்ச் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் சென்னை-கும்பகோணம் சாலையில், சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடியில், வீராணம் ஏரியின் வடிகால் வாய்க்கால் குறுகிய வளைவு பாலம் கடந்த, 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த பாலம் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டும் ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் எதிரே எதிரே கடந்து செல்லாத வகையில் குறுகி வளைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் இப்பாலத்தில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தன.

இந்நிலையில் அங்கு புதிய பாலம் மாவட்ட அம்மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கனம வளத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார். கனிம வள நிதி, 3 கோடியே 78 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில் புதிய பாலம் கட்டுவதற்கு ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு பில்லர் போடுவதற்கு பள்ளம் தோண்டும் பணியை துவங்கியுள்ளனர்.

இப்பால கட்டுமானப்பணிகளில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவக்குமார், உதவி கோட்ட பொறியாளர் கவிதா மற்றும் உதவி பொறியாளர் விமல் மேற்பார்வையில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b