Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மார்ச் (ஹி.ச.)
சென்னையை அடுத்த நாவலூர்,சாமூண்டிஸ்வரர் நகர், 3-வது தெருவில் மூன்று வீடுகள் அடுத்தடுத்து உள்ளது.
இன்று காலை சுமார் 7:40 மணியளவில் வெடி விபத்து சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தபோது மூன்று வீடுகள் இடிந்து விழுந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
சஞ்சய் குமார் - சோனியா தம்பதிகளின் ஒன்றரை வயது ஆண் குழந்தை தீரன், கிருத்திகா(4) இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர் உள்ளே இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததை பார்த்த அருகில் உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சேர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுவன் உள்ளிட்ட 7 பேரை மீட்டு அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
7 வயது சிறுவன் பிரதீப், அவரது தாய் செல்வி(40), தந்தை வைரமுத்து(45), சஞ்சீவ் குமார்(27), சோனியா(25), முருகன்(45), சித்ரா(55) ஆகிய 7 பேர் தீக்கயங்களுடன் தனியார் மற்றும் அரசு மருத்துவனனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ