தம்மம்பட்டி ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகளுக்கு பூமி பூஜை
சேலம், 15 மார்ச் (ஹி.ச) சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயிலிலானது சுமார் 800 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. இந்த கோயில் வளாகத்தில் உள்ள மண் தரை தரை தளம் முழுமையும் பேவர் பிளா
Groundbreaking ceremony


சேலம், 15 மார்ச் (ஹி.ச)

சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயிலிலானது சுமார் 800 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.

இந்த கோயில் வளாகத்தில் உள்ள மண் தரை தரை தளம் முழுமையும் பேவர் பிளாக் போட என சுமார் ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் செய்ய தம்மம்பட்டி பக்தர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், கோயில் தலைமை அறங்காவலர் சண்முகம், கோவில் திருப்பணி குழு தலைவர் திருச்செல்வன், அரசு ஒப்பந்ததாரர் மோகன், தொழிலதிபர்கள் செல்லப்பன், மளிகை சீனிவாசன் உள்ளிட்ட நன்கொடையாளர்கள், அறங்காவலர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Hindusthan Samachar / vidya.b