கரூரில் தனியார் கல்லூரி வாகனம் மோதி எற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவ,மாணவியரை நேரில் சென்று நலம் விசாரித்த எம்.பி ஜோதிமணி
சென்னை,15 மார்ச் (ஹி.ச) கரூரில் தனியார் கல்லூரி வாகனம் மோதி எற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவ,மாணவியரை எம்பி ஜோதிமணி நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, நேற்று, கரூர் மாவட்டம், வெ
Joth


சென்னை,15 மார்ச் (ஹி.ச)

கரூரில் தனியார் கல்லூரி வாகனம் மோதி எற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவ,மாணவியரை எம்பி ஜோதிமணி நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

நேற்று, கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள குளத்தூரில் தனியார் சிமெண்ட் ஆலை சரக்கு ரயிலோடு, தனியார் கல்லூரி வாகனம் மோதி எற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவ,மாணவியரை உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.

ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளவே சிறிது நேரம் பிடித்தது. யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.

அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் உடனடியாக வழங்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டு உடனிருந்தோம்.அந்த நேரத்தில் காயமடைந்தவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் உடனிருந்து ஆறுதல் தெரிவித்தேன்.

இந்த விபத்தில் காயமடைந்த சில மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த அனைத்து மாணவர்களும் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்.

மிகச் சிறப்பாகவும்,விரைவாகவும் செயல்பட்ட கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்கள்,செவிலியர்கள்,மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் எமது மக்கள் சார்பாக மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிமெண்ட் ஆலை நிர்வாகம் உடனடியாக ஆளுடன் கூட கேட் அமைக்க அறிவுத்தப்பட்டுள்ளது. அதே போல தனியார் கல்லூரியும் மாணவர்களின் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும். அதை சன்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ