காவல்துறை பட்டாலியன் படைப் பிரிவில் பணி புரிந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல்துறை உயர் அதிகாரி கைது
கோவை, 15 மார்ச் (ஹி.ச.) கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைபுதூர் பகுதியில் தமிழ்நாடு 4-வது பட்டாலியன் படைப் பிரிவு உள்ளது. இதில் கமாண்டராக காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அங்கு பணி செய்யும் பெண
கைது


கோவை, 15 மார்ச் (ஹி.ச.)

கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைபுதூர் பகுதியில் தமிழ்நாடு 4-வது பட்டாலியன் படைப் பிரிவு உள்ளது.

இதில் கமாண்டராக காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர் அங்கு பணி செய்யும் பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு பல்வேறு பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக கூறப்பட்டது.

மேலும் அவர் பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி பேசி உள்ளது தொடர்பான புகார்கள் உயரதிகாரிகளிடம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது.

இதனிடையே கடந்த மாதம் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் போத்தனூரில் உள்ள கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த சூழலில் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் காவல் அதிகாரி செந்தில் குமாரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பாலியல் புகாரில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam