Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 15 மார்ச் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம்
முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை – மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
ஆலத்துடையான் பட்டி சேடர் தெருவை சேர்ந்த மனோகரன் (60) மற்றும் அவரது மனைவி சரசு (55) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் தா.பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே நெல் ஏற்றி வந்த லாரி திடீரென அவர்களின் இருசக்கர வாகனத்தில் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் மனோகரன் மற்றும் சரசு இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதும் அப்பகுதி மக்கள் திரண்டனர்.
தகவல் அறிந்த தா.பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் உயிரிழந்த மனோகரன் மற்றும் சரசு ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தாத்தையங்கார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN