சென்னை - தஞ்சாவூர், சென்னை - மங்களூரு இரு ரெயில்களும் நாளை திண்டிவனத்தில் நின்று செல்லும் - ரெயில்வே அறிவிப்பு
திருச்சி, 15 மார்ச் (ஹி.ச.) சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்கள் 16865,16866), சென்னை எழும்பூர்- மங்களூரு சென்டிரல் (வண்டி எண்கள் 16159, 16160) எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களும் பரீட்சார்த்த அடிப்படையில் நாளை (மார்ச் 16)
Railway Announcement.


திருச்சி, 15 மார்ச் (ஹி.ச.)

சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்கள் 16865,16866), சென்னை எழும்பூர்- மங்களூரு சென்டிரல்

(வண்டி எண்கள் 16159, 16160) எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களும் பரீட்சார்த்த அடிப்படையில் நாளை

(மார்ச் 16) முதல் திண்டிவனத்தில் நின்று செல்லும்

இது குறித்து திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதாவது,

சென்னை எழும்பூர் -தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டிவனத்திற்கு நள்ளிரவு 12.13 மணிக்கு வந்து 12.15 மணிக்கு புறப்படும் என்றும் மறு மார்க்கத்தில் அதிகாலை 2.13 மணிக்கு வந்து 2.15 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னை எழும்பூர்- மங்களூரு சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு 12.58 மணிக்கு வந்து 1 மணிக்கு புறப்படும் என்றும் மறு மார்க்கத்தில் 1.15 மணிக்கு வந்து 1.17 மணிக்கு புறப்படும்.

என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / vidya.b