செங்கம் அருகே லிப்ட் கேட்டு புதிய ராயல் என்ஃபீல்டு பைக்கை திருடி சென்ற  வாலிபரால் பரபரப்பு
திருவண்ணாமலை, 15 மார்ச் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த அறிவழகன் வெல்டிங் கார்பென்டராக வேலை செய்து வருகிறார். தனது புதிய ராயல் என்ஃபீல்ட் பைக்கில் பக்கிரிபாளையத்திலிருந்து செங்கம் நோக்கி வந்தவரிடம்
திருட்டு


திருவண்ணாமலை, 15 மார்ச் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த அறிவழகன் வெல்டிங் கார்பென்டராக வேலை செய்து வருகிறார்.

தனது புதிய ராயல் என்ஃபீல்ட் பைக்கில் பக்கிரிபாளையத்திலிருந்து செங்கம் நோக்கி வந்தவரிடம் திருவள்ளுவர் நகர் அருகே வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார்

உதவி செய்யும் நோக்கத்தில் லிப்ட் கொடுத்த அறிவழகன் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி கொண்டு எப்பொழுதும் ஆட்கள் அதிகம் காணப்படும் புதிய பேருந்து நிலையம்

அருகே பைக்கை நிறுத்திவிட்டு தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதே லிப்ட் கேட்டு வந்த வாலிபர் புதிய ராயல் என்ஃபீல்டு பைக்கை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்த அழிவழகன் செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சிகளின்

அடிப்படையில் பைக்கை திருடி சென்ற குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி

வருகின்றனர்.

செங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் இருசக்கர

வாகனங்கள் திருட்டு அதிகரித்து வரும் நிலையில் இரவு நேரங்களில் ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து திருடிய திருடர்கள் தற்போது பகிரங்கமாகவே எவ்வித அச்சமும் இன்றி லிஃப்ட் கேட்பது போல் நடித்து திருட்டில் ஈடுபட்டு வருவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam