பெங்களூரு, திருப்பத்தூர் பயணிகள் மின்சார ரயில் சேவையில் குறிப்பிட்ட தூரம் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, 15 மார்ச் (ஹி.ச.) ஜோலார்பேட்டை ரயில் யார்டில் தண்டவாளப் பாதை சீரமைப்பு மற்றும் மின்சாரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்
பெங்களூரு, திருப்பத்தூர் பயணிகள் மின்சார ரயில் சேவையில் குறிப்பிட்ட தூரம் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு


சென்னை, 15 மார்ச் (ஹி.ச.)

ஜோலார்பேட்டை ரயில் யார்டில் தண்டவாளப் பாதை சீரமைப்பு மற்றும் மின்சாரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:-

அரக்கோணம்-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் ஜோலார்பேட்டை ரயில் யார்டில் தண்டவாளப் பாதை மற்றும் மின்சாரப் பராமரிப்புப் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 17-ஆம் தேதி வரை பகல் 2.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை நடைபெறும்.

இதன் காரணமாக, இன்று முதல் 17-ஆம் தேதி வரை பயணிகள் மின்சார ரயில் சேவையில் குறிப்பிட்ட தூரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கே.எஸ்.ஆர். பெங்களூரு- ஜோலார்பேட்டை பயணிகள் மின்சார ரயில் (வண்டி எண் 66550) சோமநாயக்கன்பட்டிக்கும்- ஜோலார்பேட்டைக்கும் இடையிலும், அதேபோல் மறுமார்க்கத்தில் இந்த ரயில் (66549) ஜோலார்பேட்டைக்கும்-சோமநாயக்கன்பட்டிக்கும் இடையிலும் குறிப்பிட்ட தூரம் ரத்து செய்யப்படுகிறது.

அதே போன்று ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் மின்சார ரயில் (56108) திருப்பத்தூருக்கும்- ஜோலார்பேட்டைக்கும் இடையிலும், மறுமார்க்கத்தில் ஜோலார்பேட்டை- ஈரோடு பயணிகள் மின்சார ரயில் (56017) ஜோலார்பேட்டைக்கும்-திருப்பத்தூருக்கும் இடையிலும் குறிப்பிட்ட தூரம் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM