Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மார்ச் (ஹி.ச)
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15 ஆம் தேதி) அறிவித்தது.
இதனை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்தம் 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்.
வேட்புமனுத்தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது.
வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6 ஆம் தேதி ஆகும். வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.
வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9 ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை நாளன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 4 லட்சம் வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். மொத்தமாக 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் முதல் முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போதை சட்டப்பேரவை ஆட்சிக் காலம் மே 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
Hindusthan Samachar / ANANDHAN