Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 மார்ச் (ஹி.ச)
இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்களுடன் இணைந்து வீடியோ பதிவிட்டு வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின், அடுத்து வரும் காலங்களில் ரீல்ஸ் மட்டும் தான் திமுகவின் முழு நேர வேலை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண்களின் பாதுகாப்பும், போதைக் கலாச்சாரமும், கஞ்சா புழக்கமும் அதிகரித்து தமிழகமே தலைகுனிவைச் சந்தித்து வரும் வேளையில் முதல்வராக மக்களுக்கு பாதுகாப்பு குறித்து குறைந்தபட்சம் ஓர் அறிக்கை கூட வெளியிடாமல் ரீல்ஸ் ஷூட் நடத்தி அதிகாலையில் வெளியிட்டு கண்டென்ட் கிரியேட்டராக மாறிய நீங்கள் ரியல் முதல்வர் அல்ல, ரீல்ஸ் முதல்வர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களே
இனி அடுத்து வரும் காலங்களில் ரீல்ஸ் மட்டும் தான் விடியா திமுக-வின் முழு நேர வேலை என்பதை மக்கள் உணர வைக்கும் நேரம் நெருங்கி விட்டது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ