Enter your Email Address to subscribe to our newsletters

தெலங்கானா, 15 மார்ச் (ஹி.ச.)
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் உள்ள ஹயாத் நகர் பகுதியில் ஹைதராபாத்தில் உள்ள ஹயாத் நகர் பகுதியில் வசித்து வந்த அஞ்சநேயுலு - உமாராணி தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தம்பதியினரிடையே கடந்த சில காலமாக குடும்ப சச்சரவுகள் நீடித்து வந்தன. இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாகி விட்டது.
இந்நிலையில் மீண்டும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த கணவன் அஞ்சநேயுலு, வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் பலமாக அடித்தான்.
இதில் அவர் படுகாயமடைந்து, அங்கேயே ரத்த வெள்ளத்தில் விழுந்து தீவிர காயமடைந்தார்.
மனைவியின் நிலைமை மோசமடைந்ததால் பயந்த அஞ்சநேயுலு, உண்மையை மறைத்து தனது மகள்கள் மற்றும் உறவினர்களிடம், மனைவியின் தலையில் பெயிண்ட் டப்பா (பெயிண்ட் பாக்ஸ்) விழுந்தது என்று நம்ப வைத்தான்.
பின்னர் சிகிச்சைக்காக உமாராணியை உடனடியாக யஷோதா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், உமாராணி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
ஆனால் தந்தையின் நடத்தை மற்றும் அவர் சொன்ன 'பெயிண்ட் டப்பா' கதையால் இறந்த உமாராணியின் மகள்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் ஹயாத் நகர் போலீஸில் புகார் அளித்தனர்.
பின்னர் வீட்டை ஆய்வு செய்த போலீசார், அஞ்சநேயுலுவிடம் விசாரித்தபோது அவர் ஒன்றுக்கொன்று முரணான பதில்களை அளித்தான். இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரித்த போது உண்மை வெளியானது.
குடும்ப சச்சரவு காரணமாகவே தானே சுத்தியலால் அடித்துக் கொலை செய்ததாக அஞ்சநேயுலு ஒப்புக்கொண்டான்.
இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, குடும்ப பிரச்சினைகள் தானா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்பதை கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam