Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 மார்ச் (ஹி.ச.)
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இவ்வழக்கு தொடர்பாக 3-வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்பேரில், அவர் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார்.
அவருடன் கட்சி நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 7 பேர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரும் நேற்றைய தினம் டெல்லி தாஜ் மான்சிங் ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி விஜய் மேற்கொண்ட பரப்புரை கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடந்தது.
இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 10ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு, சிபிஐ சம்மன் அனுப்பியது.
ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் இருப்பதால் விஜய் விலக்கு கோரிய நிலையில், இன்று மீண்டும் ஆஜராக புதிய சம்மன் அனுப்பப்பட்டதால் இன்று மீண்டும் சி.பி.ஐ முன்பு ஆஜராகிறார்.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV