Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மார்ச் (ஹி.ச.)
சாதாரண எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்து ஐஏஎஸ் தேர்வில் முதல் முயற்சியிலையே சுப்பிரமணிய பாரதி வெற்றி பெற்றார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
I am a product of நான் முதல்வன் - சுப்பிரமணிய பாரதி
கடந்த 5 ஆண்டுகளில் 1,55,131 அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம்.
ஒட்டுமொத்தமாக 52,81,495 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.
நான்_முதல்வன் திட்டத்தில் உதவிபெற்று 145 மாணவர்கள் #UPSC குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதற்குச் சிறந்த சான்றுதான், 22 வயதில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று இந்திய அளவில் young sensation ஆகியுள்ள நம் சுப்பிரமணிய பாரதி அவர்கள்.
இதுதான் நான் காண விரும்பும் தமிழ்நாடு! வளமான இளைய தமிழ்நாடு!
நமது திராவிட மாடல் அரசு கல்வியில் செய்து வரும் முதலீடுகளின் முழுவீச்சு அடுத்த 5 ஆண்டுகளில் சமூகத்தின் நல்மாற்றத்தில் எதிரொலிக்கும்! வெற்றிக் கதைகள் மேலும் உயரும்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b