Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 16 மார்ச் (ஹி.ச.)
கோவை பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் நடைபெற்ற அதிமுக மகளிர் தின விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளரும் பிரபல நடிகையுமான கௌதமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்,வருகிற சட்டமன்ற தேர்தலில் மூன்று முனை நான்கு முனை போடி இருந்தாலும் எப்போதுமே போட்டி என்பது
திமுக,அதிமுகவுக்கு இடையில் மட்டுமே என்றும் மீதம் உள்ளவர்கள் இடையில் வந்தவர்கள் எல்லாம் ஒரு தொல்லை போன்று உருவாகலாமே தவிர ஒரு தேர்தலை சந்தித்த பிறகு தான் தெரியும் என்றும் கூறினார்.
திமுக வின் ஐந்து ஆண்டு கால ஆட்சியின் கடைசியில் தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் மீதமுள்ள நான்காண்டுகள் பத்து மாதம் மக்கள் மக்களாக தெரியவில்லையா என்றும் தற்போது கூட மக்கள் மக்களாக தெரியவில்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மக்கள் வாக்கு வங்கியாக மட்டுமே தெரிகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
மாணவர்களுக்கு கொடுத்த மடிக்கணினி மறைந்த முதலமைச்சர் அம்மா இருக்கும்பொழுது பள்ளி மாணவர்களுக்கு கொடுத்தார்கள், ஆனால் தற்பொழுது கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கொடுப்பதற்கான காரணம் அவர்களுக்கு வாக்குரிமை வந்ததன் அடிப்படையில் தான் என்றும் இப்படிப்பட்ட ஒரு மோசமான மனிதத்துக்கே எதிரான கட்சியையும் ஆட்சியையும் ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் மக்கள் அந்த முடிவை எடுப்பார்கள் என்று முழு மனதோடு நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் தமிழகத்தில் எத்தனையோ போராட்டங்கள் நடைபெறும் பொழுது முதலமைச்சர் அவரது மாளிகையில் இருந்து இறங்கி வந்து அவர்களோடு பேசினாரா என்றும் காவல்துறையை ஏவி விட்டு அவர்களை எப்படி மோசமாக நடத்தினார்கள் என்று உலகமே தெரியும் என்றும் நம்பியவர்களுக்கு இப்படி ஒரு ஏமாற்றம் கிடைக்கும் என்று யாராலும் யோசித்து கூட இருக்க முடியாது என்றும் கூறினார்.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் மற்றும் அமைச்சரவை எண்ணிக்கை அடிப்படையில் 6999 என்றும் பதிவான வழக்குகள் மட்டுமே இத்தனை ஆனால் பார்வைக்கு வராமல் எத்தனையோ வழக்குகள் இருப்பதாகவும் திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராமங்களிலும் கஞ்சா மற்றும் சிந்தடிக் போதை பழக்கங்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறிய அவர், முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் மிகப்பெரிய பெருமை என்னவென்றால் இப்படி ஒரு போதைப் பொருட்களின் பரவலான விற்பனையால் இந்தத் தலைமுறையும் அடுத்த இரண்டு தலைமுறையும் நாசமாக்கி விட்டார்
அழித்துவிட்டார் என்று தான் கூற முடியும் என்றும் குற்றம் சாட்டினார்.
இதேபோல் திமுக அமைச்சர்களின் பார்வை அனைத்துமே மக்களை பொருத்தவரை ஒரு வாக்கு வங்கி தான் என்றும் இந்த இடத்தில் வந்து மக்களைப் பார்த்தால் வாக்குகளை சேகரிக்க முடியும் இந்த இடத்திற்கு போனால் அடி தான் கிடைக்கும் என்று அவர்களுக்கி நன்றாக தெரியும் என்பதால் தான் கரூர் சம்பவத்தில் முதலாவதாக சென்று நாங்கள்தான் உத்தமர்கள் என்று ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு விட்டதாகவும் அதே போல் மற்ற இடங்களில் குழந்தைகளுக்கும் இளம்பெண்களுக்கும் முதியவர்களுக்கும் எதிராக கொடூரமான குற்றங்கள் நடந்த பொழுது ஒரு இடத்தில் கூட சென்று ஆறுதல் சொல்லவில்லை ஒரு பொறுப்பு எடுத்து இருக்கிறீர்களா என்றால் அதுவும் இல்லை என்று சாடினார்.
கரூர் சம்பவத்தில் இரவோடு இரவாக பிரேத பரிசோதனை அறிக்கை தந்தார்கள் ஆனால் விளாத்திகுளம் சம்பவத்தில் தற்போது வரை பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் சொல்ல முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளது மனிதத் தன்மை அற்றது என்றும் வாய்ப்பேச்சுக்காக கூட அங்கு ஒரு ஆறுதல் கூறி பொறுப்பேற்கவில்லை என்றால் நீங்கள் எல்லாம் எப்படி ஒரு தலைவராக சொல்லிக் கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பினர்.
விளாத்திகுளம் சம்பவம் கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்க வேண்டும் எனவும் இதுதான் சாதாரண மக்களின் வாழ்க்கை எனவும் போதைப் பொருட்களால் வாழ்க்கையை இழந்த குடும்பங்கள் ஏராளம்.
இவை அனைத்தும் திமுக ஆட்சியில் நடைபெற்ற போதைப்பொருள் விற்பனையின் காரணமாகவே எனவும் தமிழகத்தில் மிகப்பெரிய வியாபாரமாக இதனை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
Hindusthan Samachar / Durai.J