சென்னை - கோவை விரைவு ரெயிலுக்கு இன்று முதல் கூடுதல் நிறுத்தம்
சேலம், 16 மார்ச் (ஹி.ச.) சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பரிசோதனை அடிப்படையில் இன்று (திங்கட்கிழமை) முதல் சென்னை அருகில் உள்ள திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என த
Additional Stop for Chennai–Coimbatore Express


சேலம், 16 மார்ச் (ஹி.ச.)

சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பரிசோதனை அடிப்படையில் இன்று (திங்கட்கிழமை) முதல் சென்னை அருகில் உள்ள திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை சென்டிரலில் காலை 6.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்டிரல்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12675) திருவள்ளூருக்கு காலை 6.43 மணிக்கு வந்தடையும்.

அதன்பிறகு இங்கிருந்து 6.45 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், வாலாஜாபேட்டை, காட்பாடி, ஆம்பூர். சேலம் வழியாக கோவைக்கு மதியம் 2.05 மணிக்கு சென்றடை யும். இதனால் அரக்கோணம், வாலாஜா சாலை, காட்பாடி மற்றும் ஆம்பூர் ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் வந்து செல்லும் நேரங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

அரக்கோணத்திற்கு காலை 7.03 மணிக்கு வரும் இந்த ரெயில் இன்று முதல் 7.08 மணிக்கு வந்து 7.10 மணிக்கு புறப்படும். அதேபோல், வாலாஜாபேட்டை ரெயில் நிலையத்திற்கு காலை 7.35 மணிக்கும், காட்பாடி ரெயில் நிலையத்திற்கு 8.03 மணிக்கும், ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கு 8.43 மணிக்கும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து செல்லும் என சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b