Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மார்ச் (ஹி.ச.)
முப்படைகளின் முதல் தளபதி பிபின் ராவத் 1958ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்தார்.
இந்தியத் தரைப்படையின் 27வது தலைமைப் படைத்தலைவராக பணியாற்றிய இவரை, இந்தியாவின் முதலாவது பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக, இந்தியக் குடியரசுத் தலைவரால் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
இவர் இந்தியப் பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பதவியேற்றார்.
இவரின் 40 ஆண்டுகால இராணுவச் சேவையினை அங்கீகரிக்கும் வகையில் பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பரம் விசிட்ட சேவா பதக்கம், உத்தம் சேவா பதக்கம், அதி விசிட்ட சேவா பதக்கம், யுத் சேவா பதக்கம், சேனா பதக்கம், விசிட்ட சேவா பதக்கம் (இருமுறை) போன்ற பல பதக்கங்கள் இவருக்கு வழங்கப்பட்டது.
இந்திய அரசு இவருக்கு 2022ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷன் விருதினை இவரது மறைவிற்குப்பின் வழங்கியது.
இவர் தமிழ்நாட்டின் குன்னூர் அருகே மில் எம்.ஐ.-17 என்ற உலங்கு வானூர்தியில் பயணித்த போது மோசமான வானிலை காரணமாக வானூர்தி விபத்துக்குள்ளாகி 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மறைந்தார்.
Hindusthan Samachar / Durai.J