தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை கண்டனம்
சென்னை, 16 மார்ச் (ஹி.ச.) சேலம் கோரிமேடு அருகே, 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் இரண்டு பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இத
Annamalai


Uw


சென்னை, 16 மார்ச் (ஹி.ச.)

சேலம் கோரிமேடு அருகே, 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் இரண்டு பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

திமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில், தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் கூட கஞ்சா புழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பின்விளைவுகள் மிகவும் அச்சமூட்டுகின்றன. நமது குழந்தைகள் எதிர்காலம் குறித்து பயம் ஏற்படுகிறது.

எங்கெங்கு கஞ்சா விற்பனை நடக்கிறது என்பது பள்ளி செல்லும் மாணவர்களுக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால், காவல்துறைக்குத் தெரியவில்லை என்பதை ஏற்க முடியாது. கஞ்சா விற்பனையின் பின்னணியில், பெரும்பாலும் திமுகவினர் இருப்பதால், ஐந்து ஆண்டுகளாக, காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகள் கட்டப்பட்டு இருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், இதற்கு மேலும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பொதுமக்களுக்குச் செய்யும் துரோகம்.

உடனடியாக, தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கஞ்சா புழக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ