சென்னை மணலியில் 400 மெகாவாட் கொண்ட துணை அனல் மின் நிலைய காலி இடத்தில் தீ விபத்து
சென்னை, 16 மார்ச் (ஹி.ச.) சென்னை மணலி விரைவுச் சாலையில் உள்ள 400 மெகாவாட் துணை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலி இடத்தில் ஏற்பட்ட தீ, மின்மாற்றியில் பரவி புகை மூட்டத்தை ஏற்படுத்தியது. சென்னை மணலி
தீ விபத்து


சென்னை, 16 மார்ச் (ஹி.ச.)

சென்னை மணலி விரைவுச் சாலையில் உள்ள 400 மெகாவாட் துணை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காலி இடத்தில் ஏற்பட்ட தீ, மின்மாற்றியில் பரவி புகை மூட்டத்தை ஏற்படுத்தியது.

சென்னை மணலி தீயணைப்பு நிலையத்திலிருந்து நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மழை காலங்களில் அங்கு உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய ஆயில் கழிவு புல் செடிகளில் படிந்துள்ளதால் தீப்பற்றி எறிந்தது.

இதனால் கொழுந்துவிட்டு எரிந்த தீயானது விண்ணை முட்டும் அளவிற்கு கருப்பு கை சூழ்ந்தது.

இதனால் மணலி நெடுஞ்சாலையில் கடந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், உடனே தீயணைப்புத் துறையினர் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam