Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மார்ச் (ஹி.ச.)
கூட்டணிக் கட்சிகளுடன் ஒத்துழைத்து பணியாற்றுவதோடு 2021 ஆம் ஆண்டு தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்ற இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டசபை தேர்தல் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் தேர்தல் வியூகங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட ரீதியான புள்ளி விவரங்களுடன் முதலமைச்சர் தகவல்களை தெரிவித்து பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கி இருக்கிறார்.
கூட்டம் முடிந்த பின்பாக செய்தியாளரிடம் பேசிய திமுக தலைமை செய்தி தொடர்பாளர் டி.கே .எஸ்.இளங்கோவன், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்ற இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற முதலமைச்சர் அறிவுறுத்தாக தெரிவித்தார்.
எஸ்.ஐ.ஆர் பணிகளில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்ப்பதற்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் கூட்டணி கட்சிகளுடன் ஒத்துழைத்து பணியாற்ற வேண்டும் மாவட்ட ரீதியாக தற்போதைய நிலை குறித்து கருத்துகளையும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
தமிழக வெற்றிக் கழகம் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தவெக தான் மறுக்கிறது.
ஆனால் பாஜக மறுத்துள்ளதா என்றும் பாஜக தான் தவெக உடன் பேசி வருகிறார்கள் அதை பாஜக மறுப்பார்களா என்று டி.கே.இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.
உடல்நிலை காரணமாக ஓய்வில் இருந்த திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூட்டத்தில் பங்கேற்க வந்த பொழுது உடல் நலம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது வந்துட்டேன்யா வந்துட்டேன் என்று பதிலளித்தார்.
இதன் பின்பு கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன்,
உடல்நிலை சரியில்லாத காரணமாக ஓய்வில் இருந்தேன்.
இப்போது கட்சிப் பணியை தொடங்கிவிட்டேன் என்றும் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 10.30 மணிக்கு தொடங்கி 12.45 வரையும் நடைபெற்றது.
Hindusthan Samachar / P YUVARAJ