Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 16 மார்ச் (ஹி.ச.)
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் அறிவிப்பு வெளியான நேற்று (15.03.2026) முதல் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பின்வரும் வழிகளில் புகார்களைப் பதிவு செய்யலாம்:
கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-599-1960
வாட்ஸ்அப் (WhatsApp) எண்: 9486454714
கைபேசி செயலி: சி-விஜில் (cVIGIL) செயலி மூலம் நேரடியாகப் புகார்களைப் பதிவேற்றலாம்.
பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பறக்கும் படைகள் (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களுக்கு (Static Surveillance Teams) அனுப்பப்பட்டு, அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b