Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 மார்ச் (ஹி.ச.)
வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்த புகாரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ஏப்ரல் 14-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை தவறாக அளித்ததாக மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 23-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
Hindusthan Samachar / Durai.J