தேர்தல் வேலைகள் தொடக்கம் - சுவரொட்டிகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரம்
கரூர், 16 மார்ச் ( ஹி.ச.) கரூரில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு சோதனைப் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றன. மக்கள் கூடும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Election Preparations Underway


கரூர், 16 மார்ச் ( ஹி.ச.)

கரூரில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு சோதனைப் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றன.

மக்கள் கூடும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறஉள்ளத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன.

தொகுதி வாரியாக பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு உள்ளிட்டவைகள் நியமனம் செய்யப்பட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (மார்ச் 16ம் தேதி) காலை 7 மணியளவில் கரூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் காந்தி கிராமம் பூங்கா பகுதியில் பறக்கும் படையினர், திண்ணப்பா நகர் அருகேயுள்ள புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனைகளை மேற்கொண்டனர்.

இப்பள்ளி அருகேயுள்ள பயணியர் காத்திருப்புக் கூடத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள், அழகப்பா நகர் பகுதியில் சாலை மையத்தடுப்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள 4 தொகுதிகளிலும் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b