சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தது -நிலக்கோட்டை தொகுதி முழுவதும் சோதனை
திண்டுக்கல், 16 மார்ச் (ஹி.ச.) 2026 சட்டப்பேரவை தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தது. இந்திய தேர்தல் ஆணையம் 2026 சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது. இதில் தமிழ்நாட்டிற்கு முதல் கட்
v


திண்டுக்கல், 16 மார்ச் (ஹி.ச.)

2026 சட்டப்பேரவை தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தது.

இந்திய தேர்தல் ஆணையம் 2026 சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது.

இதில் தமிழ்நாட்டிற்கு முதல் கட்டமாக ஒரே கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

வரும் மார்ச் 30-ஆம் தேதி மனு தாக்கல் தொடங்கி ஏப்ரல் 06-ஆம் தேதி மனு தாக்களுக்கு கடைசி நாளாகும்.

மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 07-ஆம் தேதி வேட்பு மனு வாபஸ் பெறுவது ஏப்ரல் 09-ஆம் தேதி என தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று மே 4-ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறையை உடனடியாக நடைமுறைப்படுத்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மாவட்ட ஆட்சியர் சரவணன் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவாகனங்களை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்.

அனைத்து தொகுதிக்கும் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3 பறக்கும் படை குழு, 3 நிலையான கண்காணிப்பு குழு, 1,வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்கள் வீதம் சோதனை பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதி நவீன கண்காணிப்பு கேமராவுடன் முதல் நிலை அதிகாரி, ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர், ஒரு காவலர், மற்றும் கேமரா ஒளிப்பதிவு செய்யும் நபர் மற்றும் வாகன ஓட்டுனர் என ஆய்வு குழுவினர் சோதனை வாகனத்தில் தேர்தல் குறித்த புகார்களை விசாரணை செய்வது தேர்தல் விதிமுறைகளை மீறி நடைபெறும் செயல்களை தடுத்து நிறுத்துவது, வாகனங்களை சோதனை செய்வது என வாகனை தணிக்கைகளில் இந்த குழு செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு சோதனை ஆய்வு குழுவினருக்கு 8 மணி நேர பணி என்கிற அடிப்படையில், காலை 8 மணி முதல் மதியம், 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை சுழற்சி அடிப்படையில் அதிகாரிகள் பணி மேற்கொள்ள உள்ளனர்.

அந்த அடிப்படையில்,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கொடைரோடு அருகே சுங்கச்சாவடி பகுதிகள் மற்றும் நிலக்கோட்டை, வத்தலகுண்டு பைபாஸ் ரோடு, உசிலம்பட்டி ரோடு சின்னுப்பட்டி பகுதிகளில் பறக்கும் படை,நிலையான கண்காணிப்பு ஆய்வு குழுவினர் சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / Durai.J