Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 16 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த 10 ஆம் தேதி காணாமல் போன நிலையில் 11-ம் தேதி மாலை சடலமாக
மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள்
அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது
இந்த நிலையில் குற்றவாளிகை அடையாளம் காணுவதில் காவல்துறையினர் தொடர்ந்து திணறி
வந்தனர்.
இதைத்தொடர்ந்து வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 27 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை
காவல் துறையினர் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர்.
இதைத்தொடர்ந்து விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட அந்த நபரை மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்தனர்.
மருத்துவ பரிசோதனை மூலம் மாணவியின் உடலில் இருந்து கிடைத்த தடயங்கள் மூலம்
விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட நபர்களின் ரத்த மாதிரிகள் உள்ளிட்டவை ஒத்துப்
போகிறதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆறாவது நாளாக குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் தமிழக கூடுதல் சட்டம் ஒழுங்கு தலைமை இயக்குனர் டாக்டர் மகேஸ்வரர் தயாள்
உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அலுவலகத்தில் முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று காவல்துறை நடவடிக்கை குறித்து விசாரணை
நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது இதில் காவல்துறையினர் இந்த கொலை வழக்கில்
எடுத்துள்ள நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் தகவல்களை தெரிவிக்க
இருக்கின்றனர்.
தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறை
குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாததை தொடர்ந்து ஆறாவது நாளாக உடலை வாங்க
மறுத்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam