மிளகாய் விலை குறைவால் விவசாயிகள் ஏமாற்றம் - உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
விருதுநகர், 16 மார்ச் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கோதை நாச்சியார்புரம், மடத்துப்பட்டி, விஜய கரிசல்குளம், எட்டக்கப்பட்டி, கங்கர் சேவல், கீழத்தாயில்பட்டி, பூசாரி நாயக்கன்பட்டி, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் மிளகாய் அதிகளவு சாக
M


விருதுநகர், 16 மார்ச் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள

கோதை நாச்சியார்புரம், மடத்துப்பட்டி, விஜய கரிசல்குளம், எட்டக்கப்பட்டி, கங்கர் சேவல், கீழத்தாயில்பட்டி, பூசாரி நாயக்கன்பட்டி, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் மிளகாய் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மிளகாய்க்கு சந்தையில் எப்போதும் தேவை இருப்பதால் இப்பகுதியில் தொடர்ந்து மிளகாய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

கிணற்று பாசனம் மூலம் மிளகாய் பயிரிடப்பட்டு வருகிறது. மிளகாய் பயிரிடப்பட்டு 70 நாட்கள் கழித்து அறுவடை செய்யப்படுகிறது.

தொடர்ந்து செடிகளில் இரண்டு மாதங்கள் வரை மிளகாய்களை பறிக்க முடியும்.

அதுவரை செடிகளில் களை பறித்தல், மருந்து தெளித்தல், உள்ளிட்ட பணிகளை கவனமுடன் பராமரித்தால் அறுவடை சமயங்களில் நன்கு விளைச்சலைத் தரும். விவசாயிகளுக்கு லாபத்தை தரக்கூடிய பயிரில் மிளகாய் பயிருக்கும் முக்கியத்துவம் உண்டு.

மிளகாய் பயிரிடப்பட்டு சமயத்தில் கிலோ ஐம்பது ரூபாயாக இருந்தது.

அறுவடை சமயத்தில் மேலும் விலை கூட வாய்ப்பு இருக்கு என்பதாகல் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.

மாறாக விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இது குறித்து மடத்துப்பட்டி விவசாயி அழகர்சாமி கூறியது,

சந்தையில் தேவை இருப்பதால் தக்காளி கத்திரிக்காய்களை விட மிளகாய் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மிளகாய் பயிரிடப்பட்ட சமயத்தில் 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது அறுவடை தொடங்கிய நிலையில் கிலோ ரூபாய் 23 ரூபாய் ஆக குறைந்துள்ளதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளோம்.

மேலும் தற்போது விலை குறைவாக இருப்பதால் பறித்தால் கூலி கூட கொடுக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் விவசாயிகள் மிளகாய்களை பறிக்காமல் செடியில் விட்டுள்ளனர்.

ஆகையால் தமிழக அரசு நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.

Hindusthan Samachar / Durai.J