குட்கா கடத்தி வந்த காரை நிறுத்திய தலைமை காவலர் - இடித்து விட்டு காரை ஓட்டி  சென்ற நபர்
கிருஷ்ணகிரி, 16 மார்ச் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாநில எல்லையான ஜூஜூவாடி காவல் சோதனை சாவடி பகுதியில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொ
காரை பின்தொடர்ந்த போலீசார்


கிருஷ்ணகிரி, 16 மார்ச் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாநில எல்லையான ஜூஜூவாடி காவல் சோதனை சாவடி பகுதியில் போலீசார்

நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கர்நாடக மாநிலம்

பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கடத்தி வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அப்போது அந்த காரில் வந்த நபர் காரை நிறுத்தாமல் காரை நிறுத்திய தலைமை காவலர் ராஜீவ் காந்தி என்பவரை இடித்து விட்டு சென்றுள்ளார்.

அப்போது,

தலைமை காவலர் காரின் முன் பக்க பேனட்டில் விழுந்துள்ளார்.

அதனையும்

பொருட்படுத்தாமல் அந்த கடத்தல் நபர் தேசிய நெடுஞ்சாலையில் காரின் முன் பக்கத்தில் விழுந்த

தலைமை காவலரோடு காரை 4 கிமீ தூரத்திற்கு ஓட்டி சென்றுள்ளார்.

சினிமா பட பாணியில் நடந்த இந்த சம்பவம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் முபாரக் தலைமையிலான போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் அந்த காரை விரட்டி

சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஓசூர் தர்கா பகுதியில் பொதுமக்கள் உதவியுடன் அந்த காரை மடக்கி பிடித்துள்ளனர்.

அப்போது காரில் இருந்த நபர் மீண்டும் அங்கு

நின்ற போலீசாரை இடித்து விட்டு செல்ல முற்பட்டுள்ளார், இதில் காரின் முன்பகுதி

இடித்ததில் தலைமை காவலர் ராஜீவ் காந்திக்கு காலில் எலும்பு முறிவு

ஏற்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கர்நாடக மாநில மதுபான பாட்டில்களை கடத்தி சென்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஓசூர் காளேகுண்டா பகுதியை சேர்ந்த யாரப் பாஷா (34 ) என்பது

தெரிய வந்தது.

பிடிபட்ட சொகுசு காரை போலீசார் சோதனை செய்தபோது 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 390 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களும் 48 கர்நாடக

மதுபான பாக்கெட்டுகளும் இருந்தன.

அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam