Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மார்ச் (ஹி.ச.)
தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 30-ஆம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல், ஏப்ரல் 6-ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது.
ஏப்ரல் 23-ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இந்த நடத்தை விதிகள் தேர்தல் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று
காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்ற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான் துரைமுருகன், வெளியிட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாடு - புதுச்சேரி சட்டமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நாளை
(17.03.2026) முதல் வரும் 22ஆம் தேதி (22.03.2026) வரை நடைபெற உள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த நேர்காணலின் போது தொகுதி நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து வேட்பாளர்களுடன் கலந்துரையாடுதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b