2027 -பத்ம விருதுகளுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
புதுடெல்லி, 16 மார்ச் (ஹி.ச.) நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் பத்ம விருதுகள் ஒன்றாகும். 2027 ஆம் ஆண்டில் வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கு ஜூலை 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெ
Nominations for Padma Awards 2027 open


புதுடெல்லி, 16 மார்ச் (ஹி.ச.)

நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் பத்ம விருதுகள் ஒன்றாகும். 2027 ஆம் ஆண்டில் வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கு ஜூலை 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் 'ராஷ்டிரிய புரஸ்கார் இணையதளம்' (Rashtriya Puraskar Portal) வாயிலாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த விருதுகள் 2027-ஆம் ஆண்டின் குடியரசு தின விழாவின்போது அறிவிக்கப்படும்.

1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பத்ம விருதுகள், இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றாகத் திகழ்கின்றன. இவை 'பத்ம விபூஷன்', 'பத்ம பூஷன்' மற்றும் 'பத்மஸ்ரீ' என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகள் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், அரசுப் பணி, வர்த்தகம் மற்றும் தொழில் எனப் பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த சாதனைகள் மற்றும் சேவைகளுக்காக இவை வழங்கப்படுகின்றன.

இனம், தொழில், பதவி அல்லது பாலினம் ஆகிய வேறுபாடுகள் ஏதுமின்றி, அனைத்துத் தனிநபர்களும் இவ்விருதுகளைப் பெறத் தகுதி உடையவர்களாவர். இருப்பினும், மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளைத் தவிர்த்து, அரசு ஊழியர்கள் (பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் உட்பட) பொதுவாக இவ்விருதுகளைப் பெறத் தகுதி அற்றவர்கள் ஆவர்.

பத்ம விருதுகளை மக்களின் பத்ம விருதுகளாக (People’s Padma) மாற்ற அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது. தகுதியுள்ள தனிநபர்களைப் பரிந்துரைப்பது குடிமக்களை ஊக்குவிப்பதாக அமையும். தனிநபர்கள் தங்களைத் தாங்களே பரிந்துரைத்துக்கொள்ளும் முறையும் (Self-nominations) அனுமதிக்கப்படுகிறது.

பெண்கள், சமூகத்தின் நலிந்த பிரிவினர், பட்டியல் சாதியினர் (SCs), பட்டியல் பழங்குடியினர் (STs), மாற்றுத்திறனாளிகள் (Divyang) மற்றும் சமூகத்திற்குத் தன்னலமற்ற சேவையாற்றி வருபவர்கள் ஆகியோரிடையே, உண்மையாகவே அங்கீகாரத்திற்குத் தகுதியான மிகச்சிறந்த திறமையாளர்களைக் கண்டறிவதற்குத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பரிந்துரை விண்ணப்பங்களில், இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தின் வடிவத்திற்கு இணங்க, பரிந்துரைக்கப்படும் நபரின் அந்தந்தத் துறைகளில் அவர் நிகழ்த்திய சிறப்பான சாதனைகள் குறித்த விரிவான தகவல்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

பத்ம விருதுகள் மற்றும் அதற்கான பரிந்துரை செயல்முறை குறித்த கூடுதல் விவரங்களை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்திலும், பத்ம விருதுகளுக்கான இணையதளத்திலும் அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b